/உள்ளூர் செய்திகள்/திருச்சி/மணப்பாறை அருகே திடீர் "தீ' 6 குடிசைகள் முற்றிலும் நாசம்மணப்பாறை அருகே திடீர் "தீ' 6 குடிசைகள் முற்றிலும் நாசம்
மணப்பாறை அருகே திடீர் "தீ' 6 குடிசைகள் முற்றிலும் நாசம்
மணப்பாறை அருகே திடீர் "தீ' 6 குடிசைகள் முற்றிலும் நாசம்
மணப்பாறை அருகே திடீர் "தீ' 6 குடிசைகள் முற்றிலும் நாசம்
ADDED : ஜூலை 14, 2011 12:19 AM
மணப்பாறை: மணப்பாறை அருகே மேலபூசாரிபட்டியில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு அன்னத்தாய் என்பவரது வீடு திடீரென தீ பற்றி எரிந்தது.
அப்போது காற்று வீசியதால் அருகில் இருந்த ராமன், பாண்டி, மாணிக்கம், ராஜகுரு, செல்வம் ஆகியோரது வீடுகளுக்கும் தீ மளமளவென பரவியது. மணப்பாறை தீயணைப்புத்துறையினர் சம்பவ இடம் வருவதற்குள் ஆறு வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இருப்பினும் அருகில் உள்ள மற்ற குடிசை வீடுகளுக்கும் தீ பரவாமல் தீயை முற்றிலும் அணைத்தனர். தீயை அணைக்க முயன்ற விஜயன்(44) என்பவருக்கு தீக்காயம் ஏற்பட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவ்விபத்தில் பாண்டி என்பவர் தனது மகளின் படிப்பு செலவுக்காக வைத்திருந்த 10 ஆயிரம் பணம் மற்றும் 6 பவுன் நகைகள் மற்றும் ஆறு வீடுகளிலும் இருந்த அனைத்து பொருட்களும் முற்றிலும் எரிந்தன. செல்லத்துரை ஆம்னி வேனும் எரிந்து எலும்புக்கூடானது. மணப்பாறை இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் வழக்குப்பதிந்து அன்னத்தாய், வேலுத்தாய் ஆகிய இருவரிடமும் விசாரணை செய்து வருகின்றனர். சம்பவ இடத்தை திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ, உதவி கலெக்டர் சண்முக பிரியா, ஆர்.டி.ஓ., சங்கீதா நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்கினர். திருச்சி எம்.பி. குமார், முன்னாள் எம்.எல்.ஏ., பரஞ்சோதி, மணப்பாறை எம்.எல்.ஏ., சந்திரசேகர், மாவட்ட பொருளாளர் செல்வராஜ், ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம், நகர செயலாளர் பவுன்ராமமூர்த்தி ஆகியோர் பாதிக்கப்பட்டோருக்கு நேரில் ஆறுதல் கூறி வேட்டி, சேலை, போர்வை, நிவாரண மாக 1,000 ரூபாய் வழங்கினர்.


