/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பொது மக்களின் புகார் மனு பெற "பெட்டி' அறிவிப்பு பலகை இன்றி மக்கள் ஏமாற்றம்பொது மக்களின் புகார் மனு பெற "பெட்டி' அறிவிப்பு பலகை இன்றி மக்கள் ஏமாற்றம்
பொது மக்களின் புகார் மனு பெற "பெட்டி' அறிவிப்பு பலகை இன்றி மக்கள் ஏமாற்றம்
பொது மக்களின் புகார் மனு பெற "பெட்டி' அறிவிப்பு பலகை இன்றி மக்கள் ஏமாற்றம்
பொது மக்களின் புகார் மனு பெற "பெட்டி' அறிவிப்பு பலகை இன்றி மக்கள் ஏமாற்றம்
ADDED : செப் 27, 2011 12:15 AM
ஈரோடு :உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற பெட்டி வைக்கப்பட்டது.
உள்ளாட்சி தேர்தல் கடந்த 21ம் தேதி மாலை அறிவிக்கப்பட்டு, தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதனால், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமைகளில் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டம், அவ்வப்போது கலெக்டர் தலைமையில் பல்வேறு கிராமங்களில் நடத்தப்படும் மனுநீதி நாள் முகாம், மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் போன்றவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், பொதுமக்களின் அவசியமான குறைகள், புகார்களை பெற்று தீர்க்கும் வகையில், கலெக்டர் அலுவலகத்தின் பிரதான கட்டிட நுழைவுப்பகுதியில் பெரிய பெட்டி வைக்கப்பட்டு, புகார் மனுக்களை பொதுமக்கள் அதில் போட்டுச் செல்ல வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதை அறியாத கிராம மக்கள் ஏராளமானோர், நேற்று திங்கள் கிழமை மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு வழங்க வந்திருந்தனர். புகார் பெட்டி இருப்பதை அறியாமல், புகார் மனு வழங்காமல் சென்றனர். இதுகுறித்து, முறையான அறிவிப்பு பலகையை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் வைத்தால், பொதுமக்கள் தடையின்றி புகார் மனுக்களை வழங்க வாய்ப்பாகும்.