ADDED : ஜூலை 20, 2011 10:43 AM
மதுரை: வன்னிவேலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வித் துறை உத்தரவுப்படி யோகா பயிற்சி துவக்கப்பட்டது.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்புராஜ் துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் பாஸ்கரன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை அய்யம்மாள் முன்னிலை வகித்தார். யோகா ஆசிரியர் ராமச்சந்திரன் பயிற்சி அளித்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் திருமுருகன், யுவராஜா, ஷியாம்பாபு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
* பேரையூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு யோகா பயிற்சி துவக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் நாகராஜன் துவக்கி வைத்தார். ஆசிரியர் சமுத்திரம் மேற்பார்வையில் திருமங்கலம் மனவளக்கலை மன்ற பயிற்றுனர்கள் நாகஜோதி, பாப்பாத்தி பயிற்சி அளித்தனர்.