ADDED : ஆக 05, 2011 10:14 PM
ராமநாதபுரம்:பனைக்குளத்தில் நூலகம் அடிக்கடி பூட்டப்படுவதால், வாசகர்கள்
அவதிப்படுகின்றனர்.
பனைக்குளத்தில் அண்ணாமறுமலர்ச்சி திட்ட நூலகம், மாவட்ட
நூலகத்தின் கிளை நூலகமும் அமைந்துள்ளது. மாவட்ட கிளை நூலகத்திற்கு தினமும்
பலர் வந்து செல்கின்றனர். நூலகம் கடந்த சில நாட்களாக பூட்டபட்டுள்ளது.
மாவட்ட நூலகர் பழனிச்சாமி கூறியதாவது: பனைக்குளம் நூலகம் திறக்காமல் உள்ளது
குறித்து, நடவடிக்கை எடுக்கப்படும். நாள் தவறாமல் திறப்பது குறித்து
கண்காணிக்கப்படும், என்றார்.