/உள்ளூர் செய்திகள்/சேலம்/பெண்ணிடம் பாலியல் தொந்தரவு தொண்டு நிறுவன ஊழியர் மீது புகார்பெண்ணிடம் பாலியல் தொந்தரவு தொண்டு நிறுவன ஊழியர் மீது புகார்
பெண்ணிடம் பாலியல் தொந்தரவு தொண்டு நிறுவன ஊழியர் மீது புகார்
பெண்ணிடம் பாலியல் தொந்தரவு தொண்டு நிறுவன ஊழியர் மீது புகார்
பெண்ணிடம் பாலியல் தொந்தரவு தொண்டு நிறுவன ஊழியர் மீது புகார்
ADDED : ஜூலை 12, 2011 01:29 AM
சேலம்: தம்மம்பட்டியில், மகளிர் சுய உதவிக்குழு பெண்களை பயிற்சிக்கு என
அழைத்து, பாலியல் தொந்தரவு கொடுப்பதாக, தனியார் தொண்டு நிறுவனத்தைச்
சேர்ந்த தொண்டு நிறுவன ஊழியர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம்
மாவட்டம், கெங்கவல்லி தாலுகா, ஜங்கமசமுத்திரம் சிவரஞ்சனி மகளிர் குழுவைச்
சேர்ந்த லதா, ஜெயந்தி ஆகியோர், தனியார் தொண்டு நிறுவனம் குறித்து கலெக்டர்
மகரபூஷணத்திடம் புகார் மனு அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தம்மம்பட்டியில் போஸ்ட் ஆபீஸ் மேல்புறம், ஸ்பெட் என்ற தொண்டு நிறுவனம்
உள்ளது. இந்த நிறுவனத்தில் ஜெயசீலன் பணியாற்றி வருகிறார். சிவரஞ்சனி
மகளிர் குழுவில், 15 பேர் உறுப்பினராக உள்ளோம். எங்கள் குழுவை வழி
நடத்துவதற்காக வந்த தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஜெயசீலன், இரவு நேரங்களில்
பயிற்சி, கணக்கு பார்க்க வேண்டும் என, கூறி உறுப்பினர்களை
கட்டாயப்படுத்துவார். அங்கு சென்றால், பயிற்சி என்ற முறையில் எங்களை
பாலியல் தொல்லைக்கு உள்ளாக்குவார். கடன் தருவதாக கூறி, குழு
உறுப்பினர்களிடம் பணம் வசூலித்துள்ளார். குழுவில் இருந்து அவரை நீக்கி
விட்டோம். இந்நிலையில், மணியோசை என்ற குழுவைச் சேர்ந்த சங்கீதா என்ற
பெண்ணிடம், தவறாக நடக்க முற்பட்டதுடன், அவரது குடும்பத்தினரை மிரட்டும்
நடவடிக்கையில் உள்ளார். அந்த பெண்ணுக்கு உதவிக்காக சென்றால், எங்கள் மீது
தவறான புகார்களை கூறி வருகிறார். தம்மம்பட்டி போலீஸில் புகார் அளித்தும்
எந்தவித நடவடிக்கையும் இல்லை. தொண்டு நிறுவன ஊழியர் ஜெயசீலன் மீதும்,
அவருக்கு உடந்தையாக செயல்படும் நிர்வாகிகள் மீதும் கலெக்டர் உடனடியாக
நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.


