/உள்ளூர் செய்திகள்/தேனி/மகளிர் சுகாதார வளாகங்களின் நிலை அதிகாரிகள் கிராமங்களில் ஆய்வுமகளிர் சுகாதார வளாகங்களின் நிலை அதிகாரிகள் கிராமங்களில் ஆய்வு
மகளிர் சுகாதார வளாகங்களின் நிலை அதிகாரிகள் கிராமங்களில் ஆய்வு
மகளிர் சுகாதார வளாகங்களின் நிலை அதிகாரிகள் கிராமங்களில் ஆய்வு
மகளிர் சுகாதார வளாகங்களின் நிலை அதிகாரிகள் கிராமங்களில் ஆய்வு
ADDED : ஜூலை 14, 2011 09:32 PM
தேவதானப்பட்டி : அ.தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்ட நவீன மகளிர் சுகாதார வளாகங்களின் தற்போதைய நிலைபாடு பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் 2001-2005ல் அ.தி.மு.க., அரசு சுகாதாரத் திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்தது. கிராம ஊராட்சிகளில் நவீன சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டன. இவற்றை பராமரிப்பதற்கு மகளிர் குழுக்கள் நியமனம் செய்யப்பட்டன. அவர்களுக்கு ஊராட்சி சார்பில் குறைந்த பட்ச ஊதியம் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு தி.மு.க., ஆட்சியில் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பல இடங்களில் இவை காட்சி பொருளாக இருந்து வருகின்றன.
அ.தி.மு.க., அரசு 2001-2005ல் கட்டிய சுகாதார வளாகங்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அமைவிடம், பயன்பாட்டுக்கு வந்த ஆண்டு, தற்போது பயன்பாட்டில் உள்ளதா, மின்இணைப்பு உள்ளதா, மின்கட்டணம் செலுத்தப்பட்டடுள்ளதா, எவ்வளவு பாக்கி, மோட்டார் இயங்குகிறதா, கோப்பைகள் சேதமடைந்துள்ளனவா, போன்ற பல விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.


