Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பல மணி நேரம் மின் தடை "டேக்ட்' சங்கத்தினர் புகார்

பல மணி நேரம் மின் தடை "டேக்ட்' சங்கத்தினர் புகார்

பல மணி நேரம் மின் தடை "டேக்ட்' சங்கத்தினர் புகார்

பல மணி நேரம் மின் தடை "டேக்ட்' சங்கத்தினர் புகார்

ADDED : அக் 02, 2011 02:13 AM


Google News

கோவை : 'தினமும் பல மணி நேரம் ஏற்படும் மின் தடையால், தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்று, 'டேக்ட்' சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து தமிழ்நாடு ஊரகத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க (டேக்ட்) தலைவர் ஜேம்ஸ் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் 2008ம் ஆண்டு முதல் ஏற்பட்ட மின் வெட்டால், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும், தொழில் முனைவோரும் பாதிக்கப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் குறுந்தொழில் புரிந்து வந்த ஆயிரக்கணக்கான தொழில் முனைவோர், வாங்கிய கடன் திருப்பி செலுத்த முடியாமல் இன்று வரை சிரமப்பட்டு வருகின்றனர்.கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் இரண்டு மணி நேரம் மின் வெட்டு போக, மற்ற நேரங்களில் வினியோகம் சீராக இருந்தது. ஆனால், கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு பகுதியிலும் ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை, மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் முனைவோர் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.பண்டிகை காலம் நெருங்கி வருவதால், பணிகளை விரைந்து முடிக்க தொழில் முனைவோர் தீவிரமாக உள்ளனர். இந்நிலையில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு, தொழில் முனைவோரை கவலையடைய வைத்துள்ளது. தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து, தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளனர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us