/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/ஸ்பெக்டரம் ராஜா பினாமிகள் சுருட்டிய சொத்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்ஸ்பெக்டரம் ராஜா பினாமிகள் சுருட்டிய சொத்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்
ஸ்பெக்டரம் ராஜா பினாமிகள் சுருட்டிய சொத்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்
ஸ்பெக்டரம் ராஜா பினாமிகள் சுருட்டிய சொத்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்
ஸ்பெக்டரம் ராஜா பினாமிகள் சுருட்டிய சொத்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்
ADDED : ஜூலை 19, 2011 12:41 AM
அரியலூர் எம்.எல்.ஏ., பேச்சுஅரியலூர்: ''முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் பினாமிகள் சுருட்டிய அரசு சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அரியலூரில் நடந்த அ.தி.மு.க., தொழிற்சங்க பொதுக்கூட்டத்தில், எம்.எல்.ஏ., துரை மணிவேல் கூறியுள்ளார். அரியலூர் சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வின் அண்ணா தொழிற்சங்கம் சார்பில், அரியலூரில் நடந்த மே தினவிழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொது கூட்டம் நடந்தது. அண்ணா தொழிற்சங்க மாவட்ட அவைத்தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். கட்சியின் நகர செயலாளர் கண்ணன் வரவேற்றார். தொகுதி செயலாளர் கணேசன், ஒன்றிய செயலாளர்கள் ராசி மனோகரன், செல்வராஜ், அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணை தலைவர் ஆராமிர்தம், அரசு சிமெண்ட் ஆலை நிர்வாகிகள் மருதை, ராஜோக்கியம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தலைமை பேச்சாளர் கோவிந்தராசு பேசிய இக்கூட்டத்தில், அரியலூர் எம்.எல்.ஏ., துரை மணிவேல் பேசியதாவது:தமிழகத்தில் கடந்த கால தி.மு.க., ஆட்சியில் 9 இடங்களில் நடந்த இடைத்தேர்தலில், அதிகார பலம், பணமழை ஆகியவற்றால் தி.மு.க., வெற்றி பெற்றது. தொடர்ந்து தி.மு.க.,வினரின் அபரிமித ஊழல் மற்றும் மக்கள் எழுச்சி காரணமாக, கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி அபரிமிதமாக வெற்றி பெற்றது. அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தோண்ட தோண்ட நில மோசடி பற்றிய ஊழல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1.76 லட்சம் கோடி ரூபாய் மூலம் பெற்ற பணத்தை கொண்டு, ஊர், ஊராக தி.மு.க.,வினர் தேர்தல் செலவு செய்தனர். நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்படும் என கடந்த கால ஆட்சியில் கருணாநிதி அறிவித்தார். ஆனால் ஏழைகளுக்கு வழங்கப்படாத அந்த நிலம், இங்கு பெருமளவு ராஜாவின் பினாமிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. வி.கைகாட்டி, வாரணவாசி உள்ளிட்ட இடங்களில் மிக அதிக அளவில் நில மோசடி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் பினாமியாக செயல்பட்ட தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அபகரித்துள்ள அரசு நிலத்தை, ஒரே உத்தரவு மூலம் ரத்து செய்ய உள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
வரும் உள்ளாட்சி தேர்தலில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஜெயலலிதா சுட்டிக்காட்டும் வேட்பாளர்கள் தான் வெற்றி பெருவர். அரியலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு கிராமத்துக்கும் மாதம் இரண்டு முறை சென்று மக்கள் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்வேன். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் அ.தி.மு.க., மாவட்ட வக்கீல் பிரிவு இணை செயலாளர் ராம கோவிந்தராஜன், வக்கீல் வெங்கடாஜலபதி, அ.தி.மு.க., மாவட்ட பிரதிநிதி கண்ணன், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாஜலம், நாகராசன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் தாமரை ராஜேந்திரன், மாணவர் அணி சங்கர், திருமானூர் ஜம்பு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். புகழேந்தி நன்றி கூறினார்.