Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தமிழ் சேனல்களை இலவசமாக அறிவிக்க கேபிள் "டிவி' உரிமையாளர்கள் கோரிக்கை

தமிழ் சேனல்களை இலவசமாக அறிவிக்க கேபிள் "டிவி' உரிமையாளர்கள் கோரிக்கை

தமிழ் சேனல்களை இலவசமாக அறிவிக்க கேபிள் "டிவி' உரிமையாளர்கள் கோரிக்கை

தமிழ் சேனல்களை இலவசமாக அறிவிக்க கேபிள் "டிவி' உரிமையாளர்கள் கோரிக்கை

ADDED : ஜூலை 11, 2011 11:11 PM


Google News

சிதம்பரம் : தமிழ் சேனல்கள் அனைத்தையும் கட்டணமில்லா இலவச சேனலாக அறிவிக்க தமிழக முதல்வருக்கு கடலூர் மாவட்ட கேபிள் 'டிவி' உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிதம்பரத்தில் கடலூர் மாவட்ட கேபிள் 'டிவி' உரிமையாளர்கள் சங்கக் கூட்டம் தலைவர் ஜாகீர் உசேன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், அரசு கேபிள் 'டிவி' நிறுவன தலைவராக ராதாகிருஷ்ணனை நியமித்ததற்கும், சன் குழுமத்தில் இருந்து கேபிள் 'டிவி' ஆபரேட்டர்களை காப்பாற்றியதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது. தமிழ் சேனல்கள் அனைத்தையும் கட்டணமில்லா இலவச சேனலாக அறிவிக்க வேண்டும். கேபிள் 'டிவி' யில் இடைத்தரகர்களை ஒழிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் முத்து, ராஜேஷ், இளஞ்செழியன், அசோக், பட்டாபி, செந்தில்குமார், சபா, பாலாஜிபாபு, ஆதிநாராயணன், அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us