ஐகோர்ட் கிளை முன்பு மாற்றுத்திறனாளி உண்ணாவிரதம்
ஐகோர்ட் கிளை முன்பு மாற்றுத்திறனாளி உண்ணாவிரதம்
ஐகோர்ட் கிளை முன்பு மாற்றுத்திறனாளி உண்ணாவிரதம்
ADDED : ஜூலை 27, 2011 01:36 PM
மதுரை: பணியின் போது ஏற்பட்ட விபத்தில் கையை இழந்த தனக்கு நஷ்டஈடு வழங்கக்கோரி, மதுரை ஐகோர்ட் கிளை முன்பாக மாற்றுத்திறனாளி ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
தஞ்சை மாவட்டம்பட்டுக்கோட்டையச் சேர்ந்தவர் செல்வம். இவர் கதிர் அடிக்கும் இயந்திரத்தை இயக்கும் வேலை பார்த்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இவர் கதிர் அடித்துக்கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக கை இயந்திரத்தில் சிக்கியது. இவ்விபத்தில் கையை இழந்த செல்வம், தனக்கு நஷ்டஈடு கோரி, தஞ்சை மற்றும் மதுரை ஐகோர்ட்டில் மனு செய்திருந்தார். மனுக்கள் தள்ளுபடியானதால் விரக்தியடைந்த செல்வம், மதுரை ஐகோர்ட் கிளையில் உள்ள காந்தி சிலை முன்பாக உண்ணாவிரதப்பேராட்டத்தில் ஈடுபட்டார்.