ADDED : ஜூலை 14, 2011 11:41 PM
தாண்டிக்குடி : தாண்டிக்குடி அருகே உள்ள புல்லாவெளி குடகனாறு அருவியில் ஆண் பிணம் அழுகிய நிலையில் ஐõறு அடி பள்ளதாக்கில் கிடப்பதாக அவ்வழியே சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பன்றிமலை வி.ஏ.ஓ., சுப்ரமணி கொடுத்த புகாரில் ஆத்தூர் தீ அணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர். போலீஸ் விசாரனையில் கொடைக்கானல் பழம்புத்தூரை சேர்ந்த ராஜூ மகன் இளையராஜா(30) எனத் தெரியவந்தது. மனநிலை பாதிக்கப்பட்ட இவருக்கு சிகிச்சையளிக்க வத்தலக்குண்டில் தற்போது குடிபெயர்ந்துள்ளனர். வீட்டை விட்டு மாயமான இவரை ஒரு வாரமாக தேடிய நிலையில் அருவியில் இறந்துள்ளது தெரிய வருகிறது.