ADDED : ஜூலை 20, 2011 09:53 AM
கோவை: குனியமுத்தூரிலுள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் 'கம்ப்யூ காம்' மன்ற துவக்க விழா நடந்தது.
கல்லூரி முதல்வர் சுந்தரராமன் தலைமை வகித்தார். விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத, தற்போது பயன்பாட்டில் இல்லாத புதிய பொருட்களை தயாரித்து மாணவர்கள் பார்வைக்கு வைத்தனர். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வருங்காலத்தில் விளம்பர துறையில் உள்ள வேலை வாய்ப்புகள், விளம்பரங்களை வெளியிடும் முறை உட்பட மாணவர்களின் பல்வேறு சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட்டன.