/உள்ளூர் செய்திகள்/மதுரை/நஷ்டஈடு கோரி மாற்றுத்திறனாளி ஐகோர்ட் கிளையில் உண்ணாவிரதம்நஷ்டஈடு கோரி மாற்றுத்திறனாளி ஐகோர்ட் கிளையில் உண்ணாவிரதம்
நஷ்டஈடு கோரி மாற்றுத்திறனாளி ஐகோர்ட் கிளையில் உண்ணாவிரதம்
நஷ்டஈடு கோரி மாற்றுத்திறனாளி ஐகோர்ட் கிளையில் உண்ணாவிரதம்
நஷ்டஈடு கோரி மாற்றுத்திறனாளி ஐகோர்ட் கிளையில் உண்ணாவிரதம்
ADDED : ஜூலை 28, 2011 03:32 AM
மதுரை : தஞ்சை அருகே விபத்தில் வலது கை ஊனமானவர், நஷ்டஈடு வழங்க கோரி மதுரை
ஐகோர்ட் கிளையில் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
அவரிடம்
ஒத்தக்கடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.தஞ்சை மாவட்டம் வக்ரமத்தை
சேர்ந்தவர் செல்வம்(41). இவர் பாலையா என்பவரிடம் கதிர் அதிரடிக்கும்
மிஷினில் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். 2003 மார்ச் 2ல் அதே ஊரை சேர்ந்த
சத்யமூர்த்தி என்பவரது உறவினர் வயலுக்கு கதிர் அடிக்க சென்றார். அப்போது
மிஷினில் வலது கை அடிப்பட்டது. இதில் மணிகட்டுடன் கை துண்டிக்கப்பட்டது.
செல்வம், வேலையாள் இழப்பீடு சட்டத்தில் நஷ்டஈடு கோரி தொழிலாளர் கோர்ட்டில்
வழக்கு தொடர்ந்தார். வழக்கை கோர்ட் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து
ஐகோர்ட் கிளையில் சிவில் சீராய்வு மனு செய்தார். ஐகோர்ட் கிளையும் மனுவை
தள்ளுபடி செய்தது.தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறி, செல்வம் நேற்று காலை
ஐகோர்ட் கிளையில் சாகும் வரை உண்ணாவிரதத்தை துவக்கினார். அவர் கூறுகையில்,
''ஒன்பது ஆண்டுகளாக வறுமையில் வாடுகிறேன். கை ஊனமானதால், வேலை செய்ய
முடியவில்லை. ஐகோர்ட் கிளையை அணுகிய போது, இலவச சட்ட உதவி மையத்தை
அணுகும்படி தெரிவித்தனர். சட்ட உதவி மையத்தினர், சுப்ரீம் கோர்ட்டில் மனு
செய்யும்படி தெரிவித்து விட்டனர். அங்கு செல்ல வசதியில்லை. இதனால்
உண்ணாவிரதம் இருப்பதை தவிர வேறுவழியில்லை,'' என்றார். நேற்றுமாலை அவரை
ஒத்தக்கடை போலீசார், அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.