ADDED : ஜூலை 19, 2011 12:23 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது அடையாளம் தெரிந்தது.
கள்ளக்காதல் தகராறில் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி காட்டிநானயன்பள்ளி மலை அடிவாரத்தில் நேற்று முன்தினம் இளம் பெண் தலையில் கல்லைபோட்டு கொடுரூமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். முகம் முழுவதும் சிதைந்திருந்த நிலையில் பெண் யார் என்பது குறித்து உடனடியாக அடையாளம் தெரியவில்லை. இது குறித்து டவுன் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் விசாரித்தார். விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் கிருஷ்ணகிரி அடுத்துள்ள கெட்டூரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சிவநாதன் என்பவரின் மனைவி பூங்கொடி (27) என்பது தெரிந்தது. இவர்களுக்கு மூன்று பெண்குழந்தைகள் உள்ளனர். கள்ளக்காதல் விவகராத்தில் பூங்கொடி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரிக்கின்றனர்.