ADDED : ஜூலை 14, 2011 11:52 PM
மன்னார்குடி: மன்னார்குடி பஸ் ஸ்டாண்ட் அருகில் கஞ்சா விற்ற நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.
மன்னார்குடி கோட்டம் டி.எஸ்.பி., அன்பழகன் உத்தரவின் படி இன்ஸ்பெக்டர் ரஞ்சித்சிங் தலைமையில் போலீஸார் வாகன சோதனை மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு ரோந்து சென்றனர். அப்போது பஸ் ஸ்டாண்ட் அருகில் 57 தென்பாதி கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டியன் (57), வீரமணி (56), ஆறுமுகம் (36), கொரத்தூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (38) ஆகிய நால்வரும் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. நால்வரும் ஒரு கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு மன்னார்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி பாண்டியன் பிள்ளை நான்கு பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.