/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஆம்னி பஸ்களால் போக்குவரத்து...நெரிசல் சேலம் - ஓமலூர் ரோட்டில் அவலம்ஆம்னி பஸ்களால் போக்குவரத்து...நெரிசல் சேலம் - ஓமலூர் ரோட்டில் அவலம்
ஆம்னி பஸ்களால் போக்குவரத்து...நெரிசல் சேலம் - ஓமலூர் ரோட்டில் அவலம்
ஆம்னி பஸ்களால் போக்குவரத்து...நெரிசல் சேலம் - ஓமலூர் ரோட்டில் அவலம்
ஆம்னி பஸ்களால் போக்குவரத்து...நெரிசல் சேலம் - ஓமலூர் ரோட்டில் அவலம்
ADDED : ஆக 08, 2011 03:04 AM
சேலம் : சேலம் புது பஸ் ஸ்டாண்ட் எதிரில், ஓமலூர் மெயின் ரோட்டில் ஆம்னி பஸ்கள் ரோட்டை மறித்து நிறுத்தப்படுவதால், தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதை தடுக்க ஆம்னி பஸ்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பஸ் நிறுத்தத்தை பயன் படுத்த உத்தரவிட வேண்டும். ஆனால், ஆம்னி பஸ்களில், 'ஓசி' பயணம் செய்யம் அதிகாரிகள், வாகனங்கள் நீண்ட தூரம் நின்றால் கூட கண்டுகொள்வதில்லை. சேலம் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு தினம் தோறும் ஆயிரக்கணக்கான வெளியூர் பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால், இப்பகுதி எப்போதும் மக்களின் கூட்டத்தால் பரபரப்பாக காணப்படும். சேலம் - ஓமலூர் மெயின் ரோட்டில் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு, டவுன் பஸ்கள் செல்லும் வழியில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இதே போல், பஸ்கள் வெளியேறி ஓமலூர் ரோட்டில் இணையும் பகுதியிலும் சிக்னல்கள் இயங்குகிறது. இந்த இரண்டு சிக்னல்களுக்கும் இடைப்பட்ட பகுதியில் மொபெட், கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த போலீஸார் தடை விதித்து உள்ளனர். இந்த தடை அமலில் உள்ள நிலையில், ஆம்னி பஸ்கள் இந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் பகல், இரவு நேரங்களில் நீண்ட நேரம் ஆக்ரமித்து நிறுத்திக் கொள்கின்றனர். இதனால், இப்பகுதியில் சிக்னல்கள் இயங்கினாலும், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்கமுடியாததாக உள்ளது. சில நாட்களாக புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில், போக்குவரத்துக்கு இடையூராக சாலையோரம் நிறுத்தப்படும் கார் உள்ளிட்ட வாகனங்களின் சக்கரங்களில் அதிகாரிகள் பூட்டு போட்டு பூட்டி செல்கின்றனர். அதே சமயம் பகல் 11 மணிக்கு மேல், புது பஸ்ஸ்õண்ட் பகுதியில் ஆம்னி பஸ்களின் அணிவகுப்பு தொடங்கி விடுகிறது. இதனால், சிக்னல் விதிமுறைகளை பின்பற்றி வாகனங்களை இயக்க முடியாமல், சேலம் மக்கள் தவிக்கின்றனர். அப்பகுதியில் பணியில் இருக்கும் போக்குவரத்து போலீஸார் முதல், அதிகாரிகள் வரை ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. காரணம், பல போலீஸ் அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர், ஆம்னி பஸ்களில், 'ஓசி' பயணம் செய்வது தான். இந்த பஸ்களின் ஆக்ரமிப்பால் நகர பஸ்கள், வெளியூர் பஸ்கள் மட்டுமின்றி மொபெட் உள்ளிட்ட வாகனங்களும் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன. இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக இப்பகுதியில் தினம் தோறும் வாகன விபத்து அதிகரித்து வருகிறது. காலை, மாலையில் மட்டுமின்றி மதிய நேரத்திலும் ஆம்னி பஸ்கள் சாலையில் நிறுத்தப்படுவதால், பிற வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில், சில ஆண்டுகளுக்கு முன், ஆம்னி பஸ்களுக்கு என, தனியாக பஸ் நிறுத்தம், மாநகராட்சி நிர்வாகத்தால் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு ஒதுக்கி கொடுக்கப்பட்ட இடத்தை, தற்போது அவர்கள் பயன் படுத்துவது இல்லை. மாறாக ஓமலூர் மெயின் ரோடு முழுவதையும் ஆக்ரமித்தே ஆம்னி பஸ்கள் நிறுத்தப்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில், ஆம்னி பஸ்களை அதற்காக ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கம் உடனடியாக நடவடிக்கை எடுப்பாரா?


