/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சிண்டிகேட் வங்கி கிளையில் வாடிக்கையாளர் சந்திப்புசிண்டிகேட் வங்கி கிளையில் வாடிக்கையாளர் சந்திப்பு
சிண்டிகேட் வங்கி கிளையில் வாடிக்கையாளர் சந்திப்பு
சிண்டிகேட் வங்கி கிளையில் வாடிக்கையாளர் சந்திப்பு
சிண்டிகேட் வங்கி கிளையில் வாடிக்கையாளர் சந்திப்பு
ADDED : செப் 25, 2011 01:11 AM
உடுமலை :உடுமலை அருகே அனிக்கடவு சிண்டிகேட் வங்கி கிளையில், வாடிக்கையாளர் சந்திப்பு கூட்டம் நடந்தது.
வங்கி அலுவலர் செந்தில் வரவேற்றார். வங்கி மேலாளர் ராஜன் தலைமை வகித்து பேசுகையில், ''அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் முன்னோடியாக விளங்கும் சிண்டிகேட் வங்கி, இம்மாத துவக்கத்திலிருந்து 2,500க்கும் அதிகமான வங்கி கிளைகளில், மக்களின் சேமிப்பை ஊக்குவிக்க சேமிப்பு முகாமை நடத்தி வருகிறது. திட்டத்தில் சிறப்பம்சமாக, சிறு சேமிப்பு கணக்கு துவங்கும் அனைவருக்கும், ஏ.டி.எம்., கார்டு, சந்த் சுரக்ஷா (இன்சூரன்ஸ்), பில் செலுத்தும் வசதி கொண்ட பேமண்ட் கேட் வே, எஸ்.எம்.எஸ்., உட்பட பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. முகாம் மூலம் புதிய வாடிக்கையாளர்களை பெற்று, சிறு சேமிப்பு கணக்கில் புதிய வளர்ச்சி எட்டப்பட உள்ளது. 'ரெயின்போ' எனப்படும் சலுகைகளுடன், தங்களின் சேமிப்பை பெருக்க கிராம மக்கள் புதிய திட்டத்தில் இணைய முன் வர வேண்டும்,'' என்றார்.வாடிக்கையாளர்கள், வங்கியின் பல்வேறு சேவைகளை பயன்படுத்தி, கிராமப்புற வங்கி வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என, வங்கியின் வேளாண் அதிகாரி சீனிவாசன் தெரிவித்தார். வாடிக்கையாளர் மணி உட்பட பலர் பேசினர். அனிக்கடவு, ராமச்சந்திராபுரம் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த பலர் பங்கேற்றனர்.