Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/பாக். பயங்கரவாத அமைப்பின் தலைவருக்கு ஜாமின்

பாக். பயங்கரவாத அமைப்பின் தலைவருக்கு ஜாமின்

பாக். பயங்கரவாத அமைப்பின் தலைவருக்கு ஜாமின்

பாக். பயங்கரவாத அமைப்பின் தலைவருக்கு ஜாமின்

ADDED : ஜூலை 15, 2011 03:44 AM


Google News
லாகூர்: பாகி்ஸ்தானின் லஷ்கர்-இ-ஜஹாங்வி என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரை 14 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பின் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் ஜாமினில் விடுவித்தது.

பாகிஸ்தானின் லஷ்கர்-இ- ஜஹாங்வி என்ற அமைப்பின் தலைவராக உள்ளார் மாலிக் ஷா இஷாக். இவர் மீது பயங்கரவாத செயல்களில்ஈடுபட்டது, தலைமைச் செயலகம் மீது தாக்குதல் நடத்தியது. கடந்த 1990-ம் ஆண்டு ஷியா பிரிவு எனும் சிறுபான்மை அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவரை கொலை செய்தது உள்ளிட்ட 45 வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளன. கடந்த 1997-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். தவிர கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்த போது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டார். முன்னாள் அதிபர் முஷாரப் ஆட்சியின் போது இவரது இந்த இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கமாக இருந்தது. இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீதான தாக்குதல் வழக்கு தொடர்பாக பாக். சுப்ரீம் கோர்டில் மாலிக் ஷா இஷாக், ஜாமினில் விடக்‌கோரி மனு செய்திருந்தார். மாலிக் சார்பில் மிஸ்பாஉல்-ஹாக் ஆஜராகி வாதாடினார். அதில் இஷாக் மீது உள்ள 45 வழக்குகளில் 37 வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டார். ‌ஏற்கனவே 8 வருடங்கள் சிறை தண்டனையும் பெற்றார். ஆகவே இவரை ஜாமினில் விடுக்க வேண்டும் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, மாலிக் ஷா-இஷாக்கை, 1 மில்லியன் டாலர் (12 ஆயிரம் டாலர்) பினைத்தொகையின் பேரில் அவரை ஜாமினில் விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுவிக்கப்பட்ட மாலிக்-ஷா இஷாக்கை, லாகூர் சிறைக்கு வெளியே காத்திருந்த 100-க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் மாலை அணிவித்து வரவேற்று அளித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us