ADDED : ஜூலை 15, 2011 01:26 AM
மதுரை : மதுரை மாவட்ட ரெட்டி நலச்சங்க கூட்டம் தலைவர் ராமலிங்கம் தலைமையில் நடந்தது.
செயலாளர் பெருமாள், பொருளாளர் ராஜேந்திரன், துணைத் தலைவர் அழகர்சாமி பங்கேற்றனர். கூட்டத்தில் ரெட்டி சமூகத்தினரை மத்திய அரசின் இதர பிற்பட்டோர் பட்டியலில் இடம்பெறச் செய்த மாநில அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது, தேனி அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர் பாலமுருகன், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையால் சிறந்த ஆசிரியர் விருது பெற்றமைக்கு பாராட்டுவது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


