/உள்ளூர் செய்திகள்/கரூர்/மேடையில்லாத தென்னிலை சந்தை வியாபாரிகள் வாரந்தோறும் அவதிமேடையில்லாத தென்னிலை சந்தை வியாபாரிகள் வாரந்தோறும் அவதி
மேடையில்லாத தென்னிலை சந்தை வியாபாரிகள் வாரந்தோறும் அவதி
மேடையில்லாத தென்னிலை சந்தை வியாபாரிகள் வாரந்தோறும் அவதி
மேடையில்லாத தென்னிலை சந்தை வியாபாரிகள் வாரந்தோறும் அவதி
ADDED : ஜூலை 14, 2011 11:59 PM
க.பரமத்தி: தென்னிலை வாரச்சந்தையில் காய்கறிகளை வைத்து விற்பனை செய்ய உரிய மேடை இல்லாததால், வியாபாரிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தென்னிலையில் வாரந்தோறும் புதன் கிழமை வாரச்சந்தை கூடுகிறது. தென்னிலை கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு ஆகிய பஞ்சாயத்துகளில் உள்ள 1,000 த்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள், தென்னிலை வாரச்சந்தைக்கு வந்து செல்கின்றனர். மேலும் தென்னிலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தங்கி, கல்குவாரிகள் மற்றும் கிரஷர் ஆலைகளில் தங்கி வேலை செய்து வரும் தொழிலாளர்களும் வாரச்சந்தையில் உணவு பொருட்களை வாங்கி வருகின்றனர். அதிகளவில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கூடும் தென்னிலை சந்தையில் உணவு பொருட்களை பாதுகாப்பான முறையில் வைத்து விற்பனை தனியாக மேடைகள் இல்லை. இதனால் வியாபாரிகள் மண் தரையில் கித்தான் பைகளை போட்டு, அதன் மேல் காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்களை வைத்து வியாபாரிகள் வியாபாரம் செய்கின்றனர். மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால், அந்த நேரத்தில் காய்கறிகளை சகதியில் வைத்து விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும் சந்தையில் பல நாட்களாக அப்புறப்படுத்தாத குப்பைகளால், சுகாதாரகேடும் ஏற்படுகிறது. இதனால் தென்னிலை வாரச்சந்தையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வசதிக்காக மேடை அமைத்து தர, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.