/உள்ளூர் செய்திகள்/திருச்சி/கொங்குநாடு கல்லூரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சிகொங்குநாடு கல்லூரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி
கொங்குநாடு கல்லூரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி
கொங்குநாடு கல்லூரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி
கொங்குநாடு கல்லூரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி
ADDED : ஜூலை 14, 2011 12:20 AM
தொட்டியம்: தொட்டியம், தோளுர்பட்டி, கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு கலந்துரையாடல் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது.
அனைத்து துறை மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில், மாணவர்கள் வாரியத்தேர்வில் மற்றும் வகுப்புத்தேர்வில் பெற்ற மதிப்பெண் பற்றியும் கல்லூரி வருகைப் பதிவேடு பற்றியும் கலந்தாய்வு நடந்தது. கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தலைவர் பெரியசாமி, பங்கேற்று வாரியத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசுகளும், நல்ல தேர்ச்சி விகிதம் தந்த ஆசிரியர்களுக்கு பரிசுகளையும் வழங்கி பாராட்டி பேசினார். இதில், மூன்றாமாண்டு முடித்த மாணவர்கள், சக்திவேல் வகுப்பில் மற்றும் கல்லூரி அளவில் முதல் பரிசாக 4,000 ரூபாய், பூர்ணசந்திரன் வகுப்பின் இரண்டாம் பரிசாக 1,750 ரூபாய், மூன்றாம் பரிசாக மாணவர் சந்திரசேகரன் 500 ரூபாய் பெற்றனர். மாணவர்கள் மணிவேல், சந்துரு, ராஜா ஆகியோர் முதல் பரிசாக 1,000 ரூபாய் பெற்றனர். பரிசு பெற்ற மாணவர்களை கல்லூரி துறை பேராசிரியர்கள், அலுவலர்கள் உட்பட பலர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


