Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/மகளை கற்பழித்த தந்தைக்குபாக்.,கில் மரண தண்டனை

மகளை கற்பழித்த தந்தைக்குபாக்.,கில் மரண தண்டனை

மகளை கற்பழித்த தந்தைக்குபாக்.,கில் மரண தண்டனை

மகளை கற்பழித்த தந்தைக்குபாக்.,கில் மரண தண்டனை

ADDED : ஜூலை 24, 2011 12:17 AM


Google News
லாகூர்:பாகிஸ்தானில் மகளை கற்பழித்த தந்தைக்கு, அந்நாட்டு கோர்ட் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.பாகிஸ்தான் லாகூரில் வசித்த தம்பதியர் கலீத் அமீன் - பர்வீன் பீவி.

இவர்களுக்கு இரண்டு மகள்களும், நான்கு மகன்களும் உள்ளனர். 2008ம் ஆண்டில் தன் மனைவியை விவாகரத்து செய்தார் அமீன். மகள்கள் மற்றும் மகன்கள், தந்தையுடன் வசித்து வந்தனர். 2009ம் ஆண்டில், தன் முன்னாள் கணவன், தன் 15 வயது மகளை கற்பழித்து விட்டதாக, லாகூர் போலீசில் பர்வீன் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்தனர். இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. 'எனக்கு உடன்படவில்லை என்றால், உன் சகோதரர்களை கொன்று விடுவேன் என, என் தந்தை மிரட்டினார்' என்று அந்த இளம்பெண், விசாரணையின் போது கூறினார். அவரை மருத்துவப் பரிசோதனை செய்ததில், கற்பழிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, நேற்று முன்தினம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மகளை கற்பழித்த கலீத் அமீனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். கோர்ட்டில் இருந்து கலீத் அமீனை போலீசார் வெளியே அழைத்து வந்தபோது, அங்கிருந்த பொதுமக்கள் சிலர், அமீனை தாக்க முயற்சி செய்தனர். போலீசார் அவர்களிடம் இருந்து அமீனை பாதுகாத்து, சிறைக்கு அழைத்துச் சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us