/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தடகள போட்டியில் உடுமலை பள்ளி 2ம் இடம்தடகள போட்டியில் உடுமலை பள்ளி 2ம் இடம்
தடகள போட்டியில் உடுமலை பள்ளி 2ம் இடம்
தடகள போட்டியில் உடுமலை பள்ளி 2ம் இடம்
தடகள போட்டியில் உடுமலை பள்ளி 2ம் இடம்
ADDED : செப் 18, 2011 09:35 PM
உடுமலை : குறுமைய தடகளப் போட்டியில், உடுமலை சீனிவாச வித்யாலயா
மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவர் கள் ஒட்டுமொத்த சாம்பியன்
பட்டத்தில் இரண்டாமிடம் பெற்றனர்.
தாராபுரத்தில், குறுமைய அளவிலான தடகளப்
போட்டிகள் நடைபெற்றது. அதில், உடுமலை சீனிவாச வித்யாலயா மெட்ரிக்
மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் குறுமைய அளவில் தடகளப் போட்டிகளில், ஒட்டு மொத்த
சாம்பியன் பட்டத்தில் இரண்டாமிடம் பெற்றனர். பள்ளி மாணவர்கள் 10 பேர்
முதலிடத்தையும், 11 பேர் இரண்டாமிடத்தையும், 7 பேர் மூன்றாமிடத்தையும்
பெற்று சாதனை படைத்தனர். மொத்தத்தில், 90 புள்ளிகள் பெற்று பட்டியலில்
இரண்டாமிடமும், 28 பரிசுகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் இரண்டாமிடமும்
பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி
ஆசிரியர்களையும் பள்ளித்தாளாளர் ரவீந்திரன், பள்ளி முதல்வர் சந்திரசேகரன்,
தலைமையாசிரியர் சத்யபாமா, பள்ளிக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள்
பாராட்டினர்.