துப்பாக்கி குண்டு வழக்கு: பெண் கைது
துப்பாக்கி குண்டு வழக்கு: பெண் கைது
துப்பாக்கி குண்டு வழக்கு: பெண் கைது
ADDED : செப் 27, 2011 12:57 AM
சென்னை: துப்பாக்கி குண்டுகளுடன் விமானத்தில் பயணம் செய்ய இருந்த இளம் பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் தவாக்; இவரது மகள் அக்கன்ஷா தவாக், 25. இவர், ஐதராபாத்தில் உள்ள கூகுள் சாப்ட்வேர் நிறுவனத்தின் விளம்பர பிரதிநிதியாக பணிபுரிகிறார். சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்ட இவர், நேற்று முன்தினம் மாலை, இண்டிகோ விமானம் மூலம், ஐதராபாத் திரும்புவதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு அவரிடம் நடத்திய பாதுகாப்பு சோதனையின் போது, அவரது கைப்பையில், ஒரு ரவுண்டு பாயின்ட் 2 எம்.எம்., துப்பாக்கி குண்டு இருந்தது, இதை அவர் பயன்படுத்த எவ்வித உரிமமும் பெறாத நிலையில், துப்பாக்கி குண்டு பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வுக் கூட அறிக்கையில், துப்பாக்கி குண்டு, 'லைவ்' ஆக இருப்பதாக அறிக்கை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, விமான நிலைய போலீசார், அக்கன்ஷா தவாக்கை, ஆயுத சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.