பொறியியல் கவுன்சிலிங்கில் 3 புதிய கல்லூரிகள்
பொறியியல் கவுன்சிலிங்கில் 3 புதிய கல்லூரிகள்
பொறியியல் கவுன்சிலிங்கில் 3 புதிய கல்லூரிகள்
ADDED : ஜூலை 13, 2011 01:03 AM
சென்னை : பொறியியல் கவுன்சிலிங் பட்டியலில், மேலும் மூன்று புதிய கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.
ஏற்கனவே, 13 புதிய பொறியியல் கல்லூரிகள், கவுன்சிலிங் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், கே.எஸ்.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி-தொக்கவாடி, நாமக்கல் மாவட்டம், ரத்தினம் தொழில்நுட்ப வளாகம்- ஈச்சநாரி, கோவை மாவட்டம், சி.ஆர்., பொறியியல் கல்லூரி-அழகர்கோவில், மதுரை மாவட்டம் ஆகிய மூன்று கல்லூரிகள், கவுன்சிலிங் பட்டியலில் சேர்ந்துள்ளன.