/உள்ளூர் செய்திகள்/கடலூர்/காளியம்மன் கோவிலில் 14ம் தேதி கும்பாபிஷேகம்காளியம்மன் கோவிலில் 14ம் தேதி கும்பாபிஷேகம்
காளியம்மன் கோவிலில் 14ம் தேதி கும்பாபிஷேகம்
காளியம்மன் கோவிலில் 14ம் தேதி கும்பாபிஷேகம்
காளியம்மன் கோவிலில் 14ம் தேதி கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 11, 2011 11:10 PM
பண்ருட்டி : பண்ருட்டி தட்டாஞ்சாவடி ஸ்ரீகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 14ம் தேதி நடக்கிறது.
அதனையொட்டி நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது.
நேற்று காலை 7 மணிக்கு சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், சம்ஹிதா ஹோமம், புனித மண் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று (12ம் தேதி) காலை 5.30 மணிக்கு பஞ்சாஸ்திர ஹோமம், ஆச்சார்ய அஸ்தராபிஷேகம், 6 மணிக்கு யானை மீது புனித தீர்த்தம் எடுத்து வருதல், 11 மணிக்கு அக்னி சங்கிரஹனம், மாலை 5 மணிக்கு அங்குரார்பணத்தை தொடர்ந்து மாலை 6 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜை துவங்குகிறது.
நாளை காலை 9 மணிக்கு விசேஷ சந்தி யாகசாலை பூஜை ஆரம்பம், புது விக்கிரகங்கள் கண் திறத்தல், அஸ்வ பூஜை, திரவயாக பூரணாஹூதியும், மாலை 5 மணிக்கு யந்திர ஸ்தாபனம், ஸ்துபீ கலச ஸ்தபானம், பிரம்மச்சாரி கன்னிகா பூஜை, தம்பதி பூஜை, வடுகு பூஜைகள் நடக்கிறது. வரும் 14ம்தேதி விடியற்காலை 5 மணிக்கு யாகசாலை பூஜைகள், கோ பூஜை, பிம்ப சுத்தி, ரக்ஷபந்தனம், சந்தானம், மகா பூர்ணாஹூதி நடக்கிறது. அதனைத் தொடர்ந்து கும்பங்கள் புறப்பாடாகி 9 மணிக்கு மகா கும்பாபிஷேகமுமும், 9.15 மணிக்கு காளியம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. மாலை 5 மணிக்கு அரசு-வேம்பு திருமணம், இரவு 8 மணிக்கு அம்மன் வீதியுலா நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா பன்னீர்செல்வம், ராமசந்திரன், விழா குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்து வருகின்றனர்.