/உள்ளூர் செய்திகள்/கடலூர்/டி.எஸ்.பேட்டை- சிதம்பரம் இடையே கூடுதல் அரசு பஸ் இயக்க கோரிக்கைடி.எஸ்.பேட்டை- சிதம்பரம் இடையே கூடுதல் அரசு பஸ் இயக்க கோரிக்கை
டி.எஸ்.பேட்டை- சிதம்பரம் இடையே கூடுதல் அரசு பஸ் இயக்க கோரிக்கை
டி.எஸ்.பேட்டை- சிதம்பரம் இடையே கூடுதல் அரசு பஸ் இயக்க கோரிக்கை
டி.எஸ்.பேட்டை- சிதம்பரம் இடையே கூடுதல் அரசு பஸ் இயக்க கோரிக்கை
ADDED : ஜூலை 11, 2011 11:08 PM
கிள்ளை : பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில் டி.எஸ்.பேட்டையில் இருந்து சிதம்பரத்திற்கு கூடுதல் அரசு பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
சிதம்பரத்தில் இருந்து 15 கி.மீ., தொலைவில் டி.எஸ்.பேட்டை மீனவ கிராமம் உள்ளது. இப்பகுதிக்கு சிதம்பரத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் சித்தலாப்பாடி, கணக்கரப்பட்டு, கள்ளிமேடு, திருவாசலடி, வடக்குப் பிச்சாவரம், தெற்கு பிச்சாவரம், கீழப்பெரம்பை, சிண்டம் பாளையம், செஞ்சிதெரு, சின்னகாரமேடு, பெரியக்காரமேடு, கீழத்திருக்கழிப்பாளை, இளந்திரிமேடு மற்றும் கொடியம்பாளையம் உள்ளிட்ட சுற்றுப்பகுதியினர் பயனடைந்து வருகின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் இல்லாததால் அப்பகுதியில் உள்ளவர்கள் மற்றும் மாணவர்கள் படியில் தொற்றிக் கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் உரிய நேரத்திற்கு செல்லமுடியாமல் பாதிக்கப்படுகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி சிதம்பரத்தில் இருந்து இந்த வழியாக கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள னர்.