/உள்ளூர் செய்திகள்/கடலூர்/புதிய ரேஷன் கடைகள் திறக்க எம்.எல்.ஏ., கோரிக்கைபுதிய ரேஷன் கடைகள் திறக்க எம்.எல்.ஏ., கோரிக்கை
புதிய ரேஷன் கடைகள் திறக்க எம்.எல்.ஏ., கோரிக்கை
புதிய ரேஷன் கடைகள் திறக்க எம்.எல்.ஏ., கோரிக்கை
புதிய ரேஷன் கடைகள் திறக்க எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : ஜூலை 11, 2011 11:06 PM
சிதம்பரம் : சிதம்பரம் தொகுதியில் புதிய ரேஷன் கடைகள் திறக்கக் கோரி மாவட்ட வழங்கல் அலுவலரிடம் பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மனு கொடுத்தார்.
மனு விவரம்: சிதம்பரம் அடுத்த குமராட்சி ஒன்றியம் நாஞ்சலூரில் இயங்கி வரும் வாடகை கட்டடத்திற்கு பதிலாகவும், பூலாமேட்டில் பழுதடைந்த கட்டடத்தில் இயங்கி வரும் நியாய விலைக்கடைக்கும் நிரந்தர கட்டடம் கட்ட வேண்டும்.
பரங்கிப்பேட்டை ஒன்றியம் சின்னக்குமட்டியில் உள்ள கடையை பிரித்து சில்லாங்குப்பத்திலும், பொன்னந்திட்டில் இயங்கி வரும் ரேஷன் கடையின் கட்டுப்பாட்டில் உள்ள மானம்பாடிக்கும் புதுச்சத்திரம் ரேஷன் கடையின் கட்டுப்பாட்டில் உள்ள வேளங்கிராயன்பேட்டையிலும், கீழ் அனுவம்பட்டு சந்தை தோப்பிலும் பகுதி நேர கடைகள் திறப்பதுடன், அத்தியாநல்லூரில் பகுதி நேர கடையாக இயங்கி வருவதை முழு நேரமாக மாற்ற வேண்டும்.
கிள்ளை பேரூராட்சி குச்சிப்பாளையத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறக்காமல் உள்ள கடையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.