/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பாதாள சாக்கடை பணியில் சொதப்பல் : அதிகாரிகளின் வாக்குறுதி "புஸ்'பாதாள சாக்கடை பணியில் சொதப்பல் : அதிகாரிகளின் வாக்குறுதி "புஸ்'
பாதாள சாக்கடை பணியில் சொதப்பல் : அதிகாரிகளின் வாக்குறுதி "புஸ்'
பாதாள சாக்கடை பணியில் சொதப்பல் : அதிகாரிகளின் வாக்குறுதி "புஸ்'
பாதாள சாக்கடை பணியில் சொதப்பல் : அதிகாரிகளின் வாக்குறுதி "புஸ்'
கடலூர் : கடலூர் நேதாஜி சாலையில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் அதிகாரிகள் கலெக்டரிடம் அளித்த வாக்குறுதிகளைக் கடந்து 2 வாரங்களாகியும் இதுவரை பணிகள் நிறைவடையவில்லை.
அப்போது பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தி வரும் அதிகாரிகள் மஞ்சக்குப்பம் நேதாஜி ரோட்டில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் ஜூன் 27ம் தேதிக்குள்ளும், மொத்த பணியும் செப்டம்பர் மாத்திற்குள் முடிக்கப்பட்டுவிடும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். மேலும் அன்றாடம் நடைபெறும் பணிகள் குறித்த விவரத்தை கலெக்டருக்கு அனுப்ப வேண்டும் எனவும் கூறப்பட்டது.
ஆனால் அதன்படி அதிகாரிகள் நிறைவேற்றினார்களா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். போக்குவரத்து மிகுந்த நேதாஜி சாலையில் பாதாள சாக்கடைத் திட்டப்பணியால் சாலை சின்னபின்னமாகி விட்டது. கடலூர் வாழ் மக்கள் தினமும் ஏதாவது ஒரு நேரத்தில் இச்சாலையை பயன்படுத்தும் நிலை உள்ளது. அத்துடன் புதுச்சேரியில் இருந்து வரும் வாகனங்களும் இச்சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். அதனால் ஏராளமானோர் தினம் தினம் 'டிராஃபிக் ஜாமில்' சிக்கி அவதிப்பட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது.
பாதாள சாக்கடைத்திட்டப்பணிகளில் பணிபுரியும் கூலியாட்கள் சொற்ப எண்ணிக்கையிலேயே பணி செய்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் கலெக்டருக்கு அளிக்கும் புள்ளி விவரங்களில் மட்டும் பணியாளர்களின் எண்ணிக்கையை கூடுதலாக்கி தவறான விவரங்களை அளித்து வருகின்றனர். இதனால் இப்பணி அதிகாரிகள் வாக்குறுதி கொடுத்ததுபோல் முடியக் கூடிய சூழ்நிலை இல்லாததால் நேதாஜி சாலையில் நடைபெறும் பணிகள் கடந்த 27ம் தேதியே பணிகள் முடித்து ஒப்படைத்திருக்க வேண்டும். அதற்குமாறாக 2 வாரங்களை கடந்தும் பணிகள் முடிந்தபாடில்லை. இவ்வாறிருக்கும்போது வரும் செப்டம்பர் மாதத்திற்குள் பணிகளை எப்படி முடிக்க போகிறார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சியில் அதிகாரிகள் அரைத்த மாவையே இப்போதும் அரைத்து வருகின்றனர் என்பதுதான் நிதர்சனம்.