/உள்ளூர் செய்திகள்/தேனி/இலவச மிக்சி-கிரைண்டர் திட்டம் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்இலவச மிக்சி-கிரைண்டர் திட்டம் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்
இலவச மிக்சி-கிரைண்டர் திட்டம் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்
இலவச மிக்சி-கிரைண்டர் திட்டம் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்
இலவச மிக்சி-கிரைண்டர் திட்டம் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்
ADDED : ஜூலை 11, 2011 10:58 PM
தேனி : இலவச மிக்சி-கிரைண்டர், மின் விசிறி திட்டத்தை செயல்படுத்த தாலுகா அளவில் கண்காணிப்பு அலுவலர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் கிராமங்களில் இருந்து துவக்கப்பட உள்ளது. அரிசி பெறும் அனைத்து கார்டுகளுக்கும் இவை வழங்கப்படுகிறது. திட்டத்தை செயல்படுத்த அடிப்படை ஆவணமாக இப்பட்டியல் அமையும். பட்டியலில் தவறான விபரங்கள் ஏதும் இடம்பெறாமல் கண்காணிப்பட உள்ளது.
இதற்காக தாலுகா வாரியாக துணை கலெக்டர் நிலையில் கண்காணிப்பு அலுவலர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தாலுகாவில், பயனாளிகள் பட்டியல் முறையாக தயாரிக்கப்படுகிறதா என்பதை அவ்வப்போது தணிக்கை செய்ய வேண்டும். பணிகள் செயல்படுவதை ஒருங்கிணைத்து கண்காணிக்க ஒருங்கிணைப்பு அலுவலர்களாக மாவட்ட வழங்கல் அலுவலர், துணை கலெக்டர் (கலர் 'டிவி') ஆகியோரும், மாவட்ட அளவில் கண்காணிக்க டி.ஆர்.ஓ.,வும் நியமிக்கப்பட்டுள்ளனர்.