/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/கல்வி கட்டண நிர்ணயம் விவகாரம் நீதிபதி முன் ஆஜராக நோட்டீஸ்கல்வி கட்டண நிர்ணயம் விவகாரம் நீதிபதி முன் ஆஜராக நோட்டீஸ்
கல்வி கட்டண நிர்ணயம் விவகாரம் நீதிபதி முன் ஆஜராக நோட்டீஸ்
கல்வி கட்டண நிர்ணயம் விவகாரம் நீதிபதி முன் ஆஜராக நோட்டீஸ்
கல்வி கட்டண நிர்ணயம் விவகாரம் நீதிபதி முன் ஆஜராக நோட்டீஸ்
ADDED : செப் 20, 2011 11:04 PM
சிவகங்கை:அரசு நிர்ணயித்த கல்வி கட்டணம் வசூலிக்காத பள்ளிகளின் தாளாளர்கள்,
நீதிபதி முன் ஆஜராக பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.
தமிழகத்தில் செயல்படும் தனியார் மெட்ரிக்., நர்சரி மற்றும் பிரைமரி
பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை வசூலிக்குமாறு உத்தரவிட்டது.
இதற்காக, பள்ளிகளில் கல்வித்துறை குழுவினர் ஆய்வு நடத்தி, ஒவ்வொரு
பள்ளியிலும் ஆசிரியர் சம்பளம், மின்கட்டணம், கட்டட வசதிகள் உள்ளிட்டவற்றை
ஆய்வு செய்து அரசுக்கு அனுப்பினர். அதன்படி, பள்ளிகளின் தரத்தை பொருத்து,
கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதற்கான கல்வி கட்டணம் விபரங்கள்
அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு
வழங்கப்பட்டது.
இருப்பினும், அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை ஏற்க முடியாது என, தனியார்
பள்ளிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பல்வேறு மாவட்டங்களில் அரசு நிர்ணயித்ததை
விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் பள்ளிகளை 'கெரோ'
செய்தனர்.இதனை தவிர்க்க கட்டணம் நிர்ணயிக்க நீதிபதி தலைமையில் தனி கமிஷன்
ஏற்படுத்தி, முதல்வர் ஜெ., உத்தரவிட்டார்.நோட்டீஸ்:பள்ளி கட்டணத்தை
ஏற்றுக்கொண்ட பள்ளிகள் தவிர்த்து, அரசு நிர்ணயித்த கட்டணம் நிர்ணயம்
செய்யாத பள்ளிகள், நீதிபதி முன் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்
வழங்கப்பட்டுள்ளது.அரசு கட்டணத்திற்கு உட்படாத பள்ளிகளின் தாளாளர்கள்,
நவ.,16ல் சென்னையில் நடக்கும் விசாரணையில் பங்கேற்கவேண்டும் என
பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து கல்வித்துறை
அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நீதிபதி முன் பள்ளி தாளாளர்கள் மட்டுமே ஆஜராக வேண்டும். அவர்கள் தங்களது
பள்ளிகளில் உள்ள வசதிகள், மாணவர்களுக்கான வசதிகள் குறித்து தெரிவித்து,
கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்வர். அதை விசாரிக்கும் நீதிபதி உரிய
கட்டணத்தை வசூலிக்குமாறு உத்தரவிடுவார். பள்ளி தாளாளர் இக்கூட்டத்தில்
பங்கேற்க முடியாத பட்சத்தில், அவரது ஒப்புதல் கடிதம் பெற்று பள்ளி
முதல்வர்கள் பங்கேற்கலாம் என்றார்.


