/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கோன் நூல் மீதான வாட் வரி நீக்க வணிகர் கூட்டமைப்பு வலியுறுத்தல்கோன் நூல் மீதான வாட் வரி நீக்க வணிகர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
கோன் நூல் மீதான வாட் வரி நீக்க வணிகர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
கோன் நூல் மீதான வாட் வரி நீக்க வணிகர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
கோன் நூல் மீதான வாட் வரி நீக்க வணிகர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
ADDED : ஆக 01, 2011 02:53 AM
ஈரோடு: 'கோன் நூல் மீதான ஐந்து சதவீதம் வாட் வரி நீக்க வேண்டும்' என, ஈரோடு
மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சிவனேசன்,
முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவர் அனுப்பியுள்ள
மனு:ஜூலை 11ம் தேதியிட்ட அரசு உத்தரவின்படி, ஜவுளி மீது ஐந்து சதவீத
மதிப்பு கூடுதல் வரி (வாட்) விதிக்கப்படும் என்றும், அந்த சட்டம் ஜூலை 12ம்
தேதி முதல் அமலுக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவை
திரும்ப பெற வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் சார்பில் வேண்டுகோள்
விடுத்திருந்தோம்.முன்பே பருத்தி பற்றாக்குறை, நூல் விலை ஏற்ற இறக்கம்,
மத்திய அரசின் பத்து சதவீத சென்வாட் வரி விதிப்பு, தொழிலாளி பற்றாக்குறை,
சாயத்தொழில் சுத்திகரிப்பு பிரச்னை ஆகியவற்றை தங்களின் பார்வைக்கு கொண்டு
வந்திருந்தோம். அதனடிப்படையில், ஜவுளி மீதான ஐந்து சதவீத வாட் வரியை
எந்தவித நிபந்தனையும் இன்றி முன் தேதியிட்டு விலக்கி கொள்ளப்படுவதாக
அறிவித்ததற்கு நன்றி கூறுகிறோம். இதன் மூலம் 20 லட்சம் தொழிலாளர்களின்
வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
அதேபோல், எங்களின் நீண்டநாள் கோரிக்கையான கோன் நூல் மீதான ஐந்து சதவீத வாட்
வரியை நீக்கி, ஜவுளி தொழிலை மேலும் வளர வழி செய்ய வேண்டும்.இந்தியா
முழுவதும் நான்கு சதவீதம் மற்றும் 12.5 சதவீதம் மட்டுமே இருக்கும் வாட்
வரியை தமிழகத்தில் மட்டும் ஐந்து சதவீதம், 14.5 சதவீதம் என்று மாற்றி
இருப்பதால், பொருள்களின் விலை உயரும். மற்ற மாநிலங்களுக்கு வணிகம் மாறி
செல்லவே வழி வகுக்கும்.
மின் சேமிப்பை ஊக்குவிக்கும் கையடக்க குழல் விளக்குகள் மீதான வாட் வரி 14.5
சதவீதம் என்பது வணிகத்தை வெகுவாக பாதிக்கும். தமிழ்நாடு மதிப்பு கூடுதல்
வரி ஆலோசனை குழு மற்றும் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தை மாற்றியமைத்து,
அனைத்து மாவட்டங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.