Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நுங்கம்பாக்கம்

நுங்கம்பாக்கம்

நுங்கம்பாக்கம்

நுங்கம்பாக்கம்

ADDED : ஆக 20, 2011 03:59 PM


Google News
அகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டு 1808ம் ஆண்டைச் சேர்ந்தது என்பதால், அதற்கு முன்பே இங்கு குடியிருப்பு அமைந்திருக்க வேண்டும்.

நுங்கம்பாக்கம், பொம்மபுரம் என, இரண்டு பெயர்களும் 18ம் நூற்றாண்டுக்கு முந்தையவை.

நுங்கு+அம்+பாக்கம் எனப் பிரித்துப் பொருள் கொள்ளலாம். சென்னை மாவட்டக் கோயில் வரலாறு நூலாசிரியர் சுப்பிரமணியப் பிள்ளையின் கருத்துப்படி, 'நுங்கம்பாக்கத்தின் கிராம தேவதை சேத்துப்பட்டில் இருக்கும் கருக்காத்த அம்மன்; கருக்களைக் காத்து அருளும் அம்மை'. இதன்படி, நுங்கம்பாக்கம் சேத்துப்பட்டின் ஒருபகுதியாக இருந்திருக்க வேண்டும். சேத்துப்பட்டு முதலில் ஊராக அமைய, அதன் பரந்த பகுதியில், பனைமரங்கள் நெருக்கமாக இருந்த மற்றொரு பகுதி குடியிருப்பாக மாறியிருக்கிறது. அப்பகுதி நுங்கம்பாக்கம் என அழைக்கப்பட்டிருக்கிறது.

பிற்காலத்தில் தெலுங்கர் குடியேற்றம் காரணமாக பொம்மபுரம் என்ற பெயர் வந்தாலும், நுங்கம்பாக்கம் என்ற பெயரே செல்வாக்குடன் நிலைத்திருக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us