/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை சீரமைக்க ரூ.8 லட்சம் ஒதுக்கீடுவீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை சீரமைக்க ரூ.8 லட்சம் ஒதுக்கீடு
வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை சீரமைக்க ரூ.8 லட்சம் ஒதுக்கீடு
வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை சீரமைக்க ரூ.8 லட்சம் ஒதுக்கீடு
வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை சீரமைக்க ரூ.8 லட்சம் ஒதுக்கீடு
ADDED : ஜூலை 13, 2011 01:46 AM
ஊட்டி : ஊட்டி சர்ச் ஹில் பகுதியில் பழுதடைந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை சீரமைக்க 8 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநில வீட்டு வசதி வாரியம் சார்பில் ஜெயில் ஹில், பிங்கர்போஸ்ட், சர்ச் ஹில் ஆகிய பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதில், சர்ச்ஹில் பகுதியில் உள்ள குடியிருப்புகள் தொலைவில் உள்ளதாலும், இரவு நேரத்தில் அந்த குடியிருப்புகள் செல்வது சிரமம் என்பதால் அவை காலியாக உள்ளன. தற்போது சிலர் இந்த குடியிருப்புகளில் குடியேறியுள்ளனர். இப்பகுதி குடியிருப்புகள் புதர்மண்டி கிடக்கின்றன. குடியிருப்புகளுக்கு அருகில் காப்புகாடு உள்ளதால், வன விலங்குகளில் நடமாட்டம் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இங்கு வசிக்கும் மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குடியிருப்புகளை சீரமைத்து, பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என 'தினமலரில்' செய்தி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, குடியிருப்புகளை சீரமைக்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் 8 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் துவங்கும் என வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் தெரிவித்தார். இந்நிலையில், இந்த குடியிருப்புகளுக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால் நகராட்சி நிர்வாகம் சாலை சீரமைக்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.