/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/குவிந்துள்ள பொருட்களை அகற்ற மாவட்ட கலெக்டரிடம் மக்கள் மனுகுவிந்துள்ள பொருட்களை அகற்ற மாவட்ட கலெக்டரிடம் மக்கள் மனு
குவிந்துள்ள பொருட்களை அகற்ற மாவட்ட கலெக்டரிடம் மக்கள் மனு
குவிந்துள்ள பொருட்களை அகற்ற மாவட்ட கலெக்டரிடம் மக்கள் மனு
குவிந்துள்ள பொருட்களை அகற்ற மாவட்ட கலெக்டரிடம் மக்கள் மனு
ADDED : ஆக 07, 2011 01:44 AM
ஊட்டி : 'பாம்பேகேஷில் சாலை ஓரத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை அகற்ற வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.ஊட்டி பாம்பே கேஷில் பகுதி பொதுமக்கள் சார்பில்,மாவட்ட கலெக்டரிடம் கொடுத்துள்ள மனு:ஊட்டி நகராட்சி 10வது வார்டுக்குட்பட்ட பாம்பேகேஷில் சாலையில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள் உடைக்கும், சேகரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் சேகரித்து வைக்கப்படும் பல்வேறு பொருட்கள் அடிக்கடி சாலை மற்றும் திறந்த வெளியில் வைக்கப்படுவதால், பொதுமக்களுக்கும், வாகன போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது.மேலும், இந்த மையத்தின் அருகில் மருத்துவமனை,மருந்து கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வரும் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இப்பகுதியில் கொண்டு வரப்படும் சில ரசாயண கழிவுப் பொருட்களால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் அபாயம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம், காவல் துறை, நகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இங்கு திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்படும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, 'இப்பகுதியில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,' என மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.