Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/குற்றாலத்தில் அன்ன சத்திரம் மீட்டு தரக்கோரிமாமன்னர் பூலித்தேவர் பாசறையினர் ஆர்ப்பாட்டம்

குற்றாலத்தில் அன்ன சத்திரம் மீட்டு தரக்கோரிமாமன்னர் பூலித்தேவர் பாசறையினர் ஆர்ப்பாட்டம்

குற்றாலத்தில் அன்ன சத்திரம் மீட்டு தரக்கோரிமாமன்னர் பூலித்தேவர் பாசறையினர் ஆர்ப்பாட்டம்

குற்றாலத்தில் அன்ன சத்திரம் மீட்டு தரக்கோரிமாமன்னர் பூலித்தேவர் பாசறையினர் ஆர்ப்பாட்டம்

ADDED : ஆக 22, 2011 02:24 AM


Google News
குற்றாலம்:குற்றாலத்தில் உள்ள அன்ன சத்திரத்தை மீட்டு தரக்கோரி மாமன்னர் பூலித்தேவர் பாசறை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.குற்றாலம் பஸ் ஸ்டாண்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாமன்னர் பூலித்தேவர் பாசறை மாநில செயலாளர் ராஜாமறவன் தலைமை வகித்தார். மாதர் இந்திய அறக்கட்டளை நிறுவனர் கணபதி சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். முக்குலத்தோர் பாதுகாப்பு பேரவை தென்மண்டல செயலாளர் தீப்பொறி முருகேசன், பூலித்தேவர் பாசறை மாவட்ட செயலாளர் சிவா, சொக்கம்பட்டி சமுதாய தலைவர் பஜார் காளை, மாரியப்பன், சுப்பையா பாண்டியன், கோபால், இசக்கிபாண்டி சிறப்புரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில் பாசறை மாநில செயலாளர் ராஜா மறவன் கூறியதாவது:''குற்றாலத்தில் வடகரை ஆதிக்கம் சொக்கம்பட்டி ஜமீன்தார் மூன்றாம்பட்டம் காளத்தியப்ப பாண்டியன், சன்னாலஞ்சி தேவன், பெரியான வஞ்சித்தேவன், கருணாலய வலங்கைபுலி பாண்டியனுக்கு பாத்தியப்பட்ட அன்னசத்திரம், சித்திரசபை மற்றும் பல இடங்கள் உள்ளது. இதனை தற்போது குற்றாலம் டவுன் பஞ்., நிர்வாகமும், இந்து சமய அறநிலைய துறையினரும் உரிமை கொண்டாடி வருகின்றனர்.

இந்த அன்னசத்திரம், சித்திரசபை போன்ற பகுதிகளில் உள்ள இடங்களை தேவர் சமுதாயத்திடம் ஒப்படைத்திட வேண்டும். கி.பி.1700 ஆண்டுக்கு மேல் உள்ள குற்றாலம் அன்ன சத்திரம், சித்திரசபை ஆவணங்களை உடனடியாக வழங்க வேண்டும். சொக்கம்பட்டி ஜமீன்தார் சொத்துக்களை ஆய்வு செய்து ஆய்வறிக்கையை வழங்கிட வேண்டும். சொக்கம்பட்டி ஜமீனுக்கு நினைவாலயம் அமைக்க வேண்டும். அரண்மனையை புதுப்பிக்க வேண்டும்.முக்குலத்தோர் கல்வி, அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் பின்தங்கியுள்ளனர். சமூகம் முன்னேற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாங்கூர் சமஸ்தானம் (கேரளா) பத்மநாபபுரம் கோயில் சொத்துக்கள் மன்னர் குடும்பத்திற்கே சொந்தம் என கேரள அரசு மற்றும் ஐகோர்ட் அறிவித்துள்ளதுபோல் சொக்கம்பட்டி ஜமீன்தார் சொத்துக்கள் முக்குலத்தோர் சமுதாயத்தினருக்கு சொந்தம் என அறிவிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் சொக்கம்பட்டி கிராம வாழ் முக்குலத்தோர், சமூகத்தினர் மாவட்ட நிர்வாகத்திடம் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டம், மாநிலம் தழுவிய சிறை நிரப்பும் பேராட்டம் நடைபெறும்'' என்றார்.ஆர்ப்பாட்டத்தில் தேவர் பேரவை, முக்குலத்தோர் பேரவையை சேர்ந்த நிர்வாகிகள், பிரதிநிதிகள், இளைஞரணியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இளைஞர் காங்.,கட்சியை சேர்ந்த காந்தி நன்றி கூறினார். பாதுகாப்பு பணியில் குற்றாலம் சப்-இன்ஸ்பெக்டர் சிவன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us