/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வளரிளம் பெண்களுக்கு சிறப்பு திட்ட பயிற்சிவளரிளம் பெண்களுக்கு சிறப்பு திட்ட பயிற்சி
வளரிளம் பெண்களுக்கு சிறப்பு திட்ட பயிற்சி
வளரிளம் பெண்களுக்கு சிறப்பு திட்ட பயிற்சி
வளரிளம் பெண்களுக்கு சிறப்பு திட்ட பயிற்சி
ADDED : ஆக 11, 2011 11:07 PM
உடுமலை : உடுமலையில், பள்ளி செல்லா மாணவியருக்கு, வளரிளம் பெண்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டது.
உடுமலை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், சத்திரம் வீதி நகராட்சி துவக்கப் பள்ளியில், வளரிளம் பெண்களுக்கான பயிற்சி முகாம், கடந்த 4ம் தேதி முதல் துவங்கி, நான்கு கட்டங்களாக நடந்து வருகிறது; 150 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. நேற்று, டாக்டர்கள் ரமா, கவிதா, மகிதீன், வளரிளம் பெண்களுக்கு பயிற்சி அளித்தனர்.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி கூறியதாவது:கி÷ஷாரி சக்தி யோஜனா (வளரிளம் பெண்களுக்கான மேம்பாட்டு திட்டம்) சார்பில், 11 வயது முதல் 15 வயது வரையுள்ள பள்ளி செல்லா மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இளம் பெண்களின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலையை மேம்படுத்துதல், சமுதாயம் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில், தேவையான கல்வியறிவு, எழுத்தறிவு மற்றும் பிற திறமைகளை முறைசாரா கல்வி திட்டத்தின் மூலம் அளித்து முடிவெடுக்கும் திறமை மேம்படுத்தப்படும். தொழில் திறன், வீட்டை பராமரித்தல் போன்றவற்றில் மேம்பாடு பெறவும், சுகாதாரம், தன் சுத்தம், ஊட்டச்சத்து, குழந்தை வளர்ப்பு, தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன; மன ரீதியான பிரச்னைகள் குறித்து விளக்கப்பட்டது. தவிர, தொழிற் கல்வி பயிற்சி, வாழ்க்கைக் கல்வி, தொழில் முனைவோர் பயிற்சி, வளரிளம் பெண்கள் திருவிழா உட்பட பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.இவ்வாறு, கிருஷ்ணவேணி கூறினார்.