ADDED : ஆக 03, 2011 10:20 PM
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தின் 47-வது கலெக்டராக மதுமதி பொறுப்பேற்றார்.
அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் நியமிக்கப்பட்ட கலெக்டர் ஆஷிஸ்குமார் ஒன்றரை மாத இடைவெளியில் தூத்துக்குடி கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து சென்னை மாநகராட்சி சுகாதார துணை ஆய்வாளராக பணியாற்றி வந்த மதுமதி புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டு பதவி ஏற்றார். சுற்றுலாஸ்தலங்கள் நிறைந்த குமரி மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி ஏற்படுத்தவும், மக்களின் குறைகளை தீர்ப்பதிலும் முக்கிய கவனம் செலுத்த போவதாக கூறினார். மதுமதி குமரி மாவட்டத்தின் மூன்றாவது பெண் கலெக்டர் ஆவார்.