/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பாளை.,யில் இன்றும.தி.மு.க.ஆலோசனை கூட்டம்பாளை.,யில் இன்றும.தி.மு.க.ஆலோசனை கூட்டம்
பாளை.,யில் இன்றும.தி.மு.க.ஆலோசனை கூட்டம்
பாளை.,யில் இன்றும.தி.மு.க.ஆலோசனை கூட்டம்
பாளை.,யில் இன்றும.தி.மு.க.ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூலை 30, 2011 02:12 AM
தென்காசி:பாளை.,யில் இன்று (30ம் தேதி) நடக்கும் ம.தி.மு.க.மாநாடு ஆலோசனை
கூட்டத்தில் வைகோ கலந்து கொள்கிறார்.ம.தி.மு.க.சார்பில் அண்ணாதுரை பிறந்த
நாள் விழா வரும் செப்.15ம் தேதி நெல்லையில் திறந்தவெளி மாநாடாக நடக்கிறது.
இதனை முன்னிட்டு மாநாடு ஆலோசனை கூட்டம் இன்று (30ம் தேதி) மாலையில்
பாளை.,நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடக்கிறது. கூட்டத்தில் ம.தி.மு.க.பொது
செயலாளர் வைகோ பேசுகிறார். நெல்லை மாநகர், நெல்லை, தூத்துக்குடி,
கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து
கொள்கின்றனர்.இதுபற்றிய அழைப்பு கடிதம் கட்சி நிர்வாகிகளுக்கு தலைமை நிலைய
செயலாளர் தமிழ்மறவன் அனுப்பியுள்ளார். கூட்டத்தில் தென்காசி நகர
ம.தி.மு.க.நிர்வாகிகள் நகர செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமையிலும், ஒன்றிய
நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர் குட்டீஸ்வரன் தலைமையிலும் கலந்து
கொள்கின்றனர்.