ADDED : செப் 04, 2011 11:13 PM
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பில் நகர அனைத்து வியாபாரிகள் சங்க 13வது ஆண்டு விழா நடந்தது.
சங்கத் தலைவர் மகாராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர்கள் பெரியண்ணன், ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர்.செயலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். மணிமாறன் துவக்கவுரையாற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வியாபாரிகள் சங்கம் சார்பில் 30 ஏழை மாணவர்களுக்கு சீருடைகள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு, ஊர்க்காவல் படை கட்டடத்திற்கு 5,000 ரூபா# நிதி, போலீஸ் நண்பர்கள் குழுவினருக்கு 10 நாற்காலிகள், பஸ் நிலையத்தில் குடி நீர்தொட்டி அமைக்க துணைத்தலைவர் பன்னாலால் வழங்கிய ரூ. 25 ஆயிரம் நிதியுதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை சமூக நலத்துறை அமைச்சர் செல்விராமஜெயம் வழங்கினார். காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., முருகுமாறன், மாவட்ட வணிகர் சங்க பேரவைத் தலைவர் பக்கிரிசாமி, சங்க நிர்வாகிகள் ஸ்ரீராம் ராமலிங்கம், தெய்வாராமலிங்கம், அ#யப்பன் திருநாவுக்கரசு, அமர்ஜோதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அ.தி.மு.க., நிர்வாகிகள் இளஞ்செழியன், அப்பாதுரை, லட்சுமிநாராயணன், சிவப்பிரகாசம், ஜெயராமன் பங்கேற்றனர்.