/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டிபாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி
பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி
பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி
பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி
ADDED : ஜூலை 19, 2011 12:41 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தி.மு.க., இலக்கிய அணி சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பாவேந்தர் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி நடந்தது.
மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நடந்த போட்டியை மாநில இலக்கிய அணிச் செயலாளர் கவிதைப் பித்தன் துவக்கிவைத்தார். தி.மு.க., மாவட்டச் செயலாளர் பெரியண்ணன் அரசு, துணைச் செயலாளர் மதியழகன், அவைத்தலைவர் சந்திரசேகரன், இலக்கிய அணி செயலாளர் செல்வராஜ், மாநில மகளிரணி செயலாளர் விஜயா, இளைஞரணி அமைப்பாளர் செந்தில், துணை அமைப்பாளர் பாலு உட்பட பலர் பங்கேற்றனர். போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சமீம் சித்தாரா முதல் பரிசு வென்றார். குத்தூஸ் மெட்ரிக் பள்ளி மாணவி லாவண்யா இரண்டாவது பரிசு, தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சங்கவி மூன்றாவது பரிசு வென்றனர்.