இன்ஸ்பெக்டர் ஆஜராக மறுப்பு : எஸ்.பி., ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
இன்ஸ்பெக்டர் ஆஜராக மறுப்பு : எஸ்.பி., ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
இன்ஸ்பெக்டர் ஆஜராக மறுப்பு : எஸ்.பி., ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
மதுரை : மதுரையில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 1.30 கோடி ரூபாய் மோசடி செய்த புகார் மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை, இன்ஸ்பெக்டர் ஆஜராகாததால், எஸ்.பி., ஆஜராக உத்தரவிட்டது.
'அமைச்சர்கள், அதிகாரிகளை தெரியும்' என, தெரிவித்த விவேகானந்தன், என் மனைவி தேவிக்கு சப்-ரிஜிஸ்தர் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை காட்டினார். அதை நம்பி, 8 லட்ச ரூபாயும், எனக்கும், உறவினர்களுக்கும் வேலை வாங்கி தருவதற்காக, 1.30 கோடி ரூபாயும் கொடுத்தோம். பணத்தை பெற்ற அவர், குடும்பத்துடன் தலைமறைவானார். போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை; வழக்கும் பதியவில்லை. நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என, கோரினார்.
மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை, புகார் ஆவணங்களுடன் இன்ஸ்பெக்டரை ஆஜராக உத்தரவிட்டது. நேற்று நடந்த மனு விசாரணையின் போது, இன்ஸ்பெக்டர் ஆஜராகாமல், பெண் எஸ்.ஐ., ஒருவர் மட்டும் ஆஜரானார்.
கோர்ட் உத்தரவிட்டும் இன்ஸ்பெக்டர் ஆஜராகாததால், இதுகுறித்து எஸ்.பி., ஆஸ்ரா கர்க், ஜூலை, 18ல் நேரில் ஆஜராகி விளக்க வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டார்.