/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/குடும்ப கட்டுப்பாடு விழிப்புணர்வு அவசியம்குடும்ப கட்டுப்பாடு விழிப்புணர்வு அவசியம்
குடும்ப கட்டுப்பாடு விழிப்புணர்வு அவசியம்
குடும்ப கட்டுப்பாடு விழிப்புணர்வு அவசியம்
குடும்ப கட்டுப்பாடு விழிப்புணர்வு அவசியம்
ADDED : ஜூலை 11, 2011 10:40 PM
ஊட்டி : 'குடும்ப கட்டுப்பாடு குறித்து கிராம பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,' என கலெக்டர் தெரிவித்தார்.மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில் உலக மக்கள் தொகை நாள் விழிப்புணர்வு குடும்ப நல சுகாதார திருவிழா துவங்கியது.
வரும் 24ம் தேதி வரை ஊட்டி அரசு மகப்பேறு மருத்துவமனையில் நடக்கிறது. இதன் துவக்க விழா ஊட்டி அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் நேற்று நடந்தது. சுகாதார பணிகள் இணை இயக்குனர் முகமது ஹனிபா வரவேற்றார். நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் பேசுகையில், ''குடும்ப கட்டுப்பாடு திட்டம் பல காலமாக செயல்பட்டு வரும் நிலையில், கிராம புறங்களில் இன்னமும் பலர் ஐந்தாறு குழந்தைகளை பெற்றுக்கொள்கின்றனர். சிறு குடும்பமே தற்போதைய சூழ்நிலைக்கு ஏதுவானது என்பதால், மருத்துவ ஊழியர்கள் மற்றும் கள பணியாளர்கள் குடும்ப கட்டுப்பாடு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.மேலும் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை பெரும்பாலும் பெண்கள் மட்டுமே மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஆண்களுக்கு நவீனமான எளிமையான முறையில் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. மேலும் அரசு சார்பில் ஆண்களுக்கு ஆயிரத்து 100 ரூபாய் ஊக்க தொகை வழங்கப்படுகிறது. பெண்கள் குடும்ப கட்டுப்பாட்டு சிகிச்சை செய்தால் 600 ரூபாய் வழங்கப்படுகிறது. எனவே, ஆண்கள் மத்தியில் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ள கள பணியாளர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் பேசினார். குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட 6 தாய்மார்களுக்கு ஊக்க தொகை வழங்கப்பட்டது. வரும் 24ம் தேதி வரை ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் அரசு மருத்துவமனைகளில் குடும்ப நல கருத்தடை சிகிச்சைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.