/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/முதுகுளத்தூரில் அரசு பஸ்களுக்கு வருவாய் கல்லா கட்டும் லோடு ஆட்டோக்கள்முதுகுளத்தூரில் அரசு பஸ்களுக்கு வருவாய் கல்லா கட்டும் லோடு ஆட்டோக்கள்
முதுகுளத்தூரில் அரசு பஸ்களுக்கு வருவாய் கல்லா கட்டும் லோடு ஆட்டோக்கள்
முதுகுளத்தூரில் அரசு பஸ்களுக்கு வருவாய் கல்லா கட்டும் லோடு ஆட்டோக்கள்
முதுகுளத்தூரில் அரசு பஸ்களுக்கு வருவாய் கல்லா கட்டும் லோடு ஆட்டோக்கள்
ADDED : செப் 06, 2011 11:52 PM
முதுகுளத்தூர் : முதுகுளத்தூரிலிருந்து கிராம பகுதிகளுக்கு இயக்கப்படும் லோடு ஆட்டோக்களால் அரசு பஸ்கள் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன.
முதுகுளத்தூர்- கிடாத்திருக்கை, கொண்டுலாவி, ஆப்பனூர், இளஞ்செம்பூர், மு.சாலை, அபிராமம், தட்டானேந்தல், ஆணைசேரி உட்பட பல கிராமங்களுக்கு தினமும் அதிகபட்சமாக மூன்று டிரிப்கள் மட்டுமே அரசு பஸ்கள் இயக்கபடுகின்றன.இதில் தட்டானேந்தல், ஆணைசேரிக்கு ஏற்கனவே இயக்கபட்ட பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. லோடு ஆட்டோ பயணத்தை மட்டுமே இப்பகுதி மக்கள் நம்பி உள்ளனர். கிடாத்திருக்கைக்கு பஸ் கட்டணம் 8 ரூபாய். லோடு ஆட்டோவில் 10ம், சில நேரங்களில் 20 ரூபாய் கூட வசூலிக்கின்றனர். இளஞ்செம்பூருக்கு பஸ் கட்டணம் 5 ரூபாய். லோடு ஆட்டோவில் 10 ரூபாய் வசூலிக்கின்றனர். சில நேரங்களில் அரசு பஸ்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.தினமும் லோடு ஆட்டோக்கள் ஆட்களை ஏற்றிச் செல்வதால் விபத்து அபாயம் நீடிக்கிறது. போதிய பஸ் வசதி இல்லாத கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் இலவச பஸ் பாஸ் பெற்றும் லோடு ஆட்டோக்களில் பணம் கொடுத்து செல்லும் அவலம் தொடர்கிறது.