/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/இலவச அரிசி வழங்க பணம் வசூலிப்பதாக புகார்இலவச அரிசி வழங்க பணம் வசூலிப்பதாக புகார்
இலவச அரிசி வழங்க பணம் வசூலிப்பதாக புகார்
இலவச அரிசி வழங்க பணம் வசூலிப்பதாக புகார்
இலவச அரிசி வழங்க பணம் வசூலிப்பதாக புகார்
ADDED : ஜூலை 13, 2011 01:50 AM
ஊட்டி : 'ரேஷன் கடையில் நல்ல அரிசி வழங்குவதற்கு பணம் வசூலிக்கும்
ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் நுகர்வோர் உரிமை சங்க பொது செயலாளர் அர்ஜூணன் மாவட்ட
வழங்கல் அலுவலருக்கு கொடுத்துள்ள மனு: இலவச அரிசி திட்டம் செயல்பட்டு வரும்
நிலையில், சில ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் நல்ல அரிசி வழங்க 10
முதல் 20 ரூபாய் வரை வசூலித்து வருவதாகவும், பணம் தராதவர்களுக்கு இரண்டு
வகை அரிசி வழங்குவதாகவும் புகார்கள் வந்துள்ளன. நஞ்சநாடு கடை உட்பட
மாவட்டத்தின் பல கடைகளில் இத்தகைய முறைகேடும் நடப்பதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை
எடுக்க வேண்டும்.இவ்வாறு, அர்ஜூணன் கூறியுள்ளார்.