பள்ளி மாணவர்கள் நகராட்சியில் ஆய்வு
பள்ளி மாணவர்கள் நகராட்சியில் ஆய்வு
பள்ளி மாணவர்கள் நகராட்சியில் ஆய்வு
ADDED : ஜூலை 15, 2011 01:02 AM
திண்டிவனம் : திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்.
திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் சேர்மன் பூபாலனை சந்தித்து ரோஷணை தாய் தமிழ் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துரையாடல் நடத்தினர். இப்பள்ளியில் இரண்டு, 3வது மற்றும் நான்காவது பயிலும் மாணவ, மாணவிகள் திண் டிவனம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள பொறியியல் பிரிவு, சுகாதார பிரிவு மற்றும் நிர்வாக பிரிவு செயல்பாடுளை நேரில் பார்வையிட்டு அறிந்து கொண்டனர். பின்னர் இவர்கள் சேர்மன் பூபாலனை சந்தித்து நகராட்சி பணிகள் குறித்து கேட்டறிந்தனர். கவுன் சிலர் அப்பாஸ்மந்திரி, கணக்காளர் ரவி உடனி ருந்தனர்.


