7 வயது சிறுவன் 7 மணி நேரம் பாடி சாதனை
7 வயது சிறுவன் 7 மணி நேரம் பாடி சாதனை
7 வயது சிறுவன் 7 மணி நேரம் பாடி சாதனை
ADDED : ஜூலை 20, 2011 05:11 PM

சென்னை: சென்னை, ஆவடி கனரக தொழிற்சாலை மைதான்த்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் 7 வயதான எல்.ஸ்ரீகாந்த், 7மணி நேரம் தொடர்ந்து பாடி சாதனை நிகழ்த்தினார்.
பாடகர்களான கே.லட்சுமணன்- ஆர்.வாணிஸ்ரீ தம்பதியின் மகனான இவர் கடந்த 3 நாட்களாக பல மேடைகளில் பாடி வருகிறார். இந்த சாதனை நிகழ்ச்சியில் இவர் 125 திரைப்பட, பக்தி மற்றும் தேசபக்தி பாடல்களைப் பாடினார். மேலும் இவர் பாடிக் கொண்டே டிரம்ஸ் வாசித்தார்; கீ போர்டு வாசித்தார்; ஓவியம் வரைந்தார்; மாஜிக் நிகழ்ச்சிகளையும் செய்து காண்பித்தார். இந்த சாதனையை ஆசிய சாதனை புத்தகம், இந்திய சாதனை புத்தகம் மற்றும் லிம்கா சாதனை புத்தகம் ஆகியவற்றால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்த சாதனையின் ஆதாரங்கள் பிரிட்டனின் பல்கலைக்கழக சாதனைகள் மற்றும் அமெரிக்காவின் போகோ வியப்பூட்டும் சிறுவர்கள் ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டுள்ளன.