ADDED : ஜூலை 20, 2011 05:34 PM

சென்னை: சென்னை ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் 6 குழுக்கள் பங்கேற்ற 6 பருவங்களுக்கான நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
இதை பிரிஜு மகாராஜ் வடிவமைத்திருந்தார். நிகழ்ச்சியின் துவக்கத்தில் தபேலா ஒலிக்க, நடன கலைஞர்கள் மூவர் மூவராக மேடையில் தோன்றினர். இதில் கோடைப் பருவத்திற்காக பிரியா வெங்கட்ராமன் தனது குழுவினருடன் பரதநாட்டியம் ஆடினார். மழைப் பருவ நாட்டியம் கதக் நாட்டியமாக இருந்தது. வசந்த காலத்திற்கான நாட்டியம் மோகினியாட்டமாக விளங்கியது. ஒவ்வொரு பருவ நடனத்திற்கும் முன்னதாக குறிப்பிட்ட பருவகாலம் குறித்தும், அது தொடர்பான நடனம் குறித்தும் விளக்கம் தரப்பட்டது. நிறைவாக ஒவ்வொரு குழுவிலுமிருந்து ஒருவர் வீதம் 6 பேர் பங்கேற்ற நடனம் நடைபெற்றது.