ADDED : செப் 11, 2011 11:04 PM
நத்தம் : நத்தம் ஒன்றியம் சேத்தூர் ஊராட்சியில் கால்நடை துணைநிலையம் இயங்காததால் கால்நடைகள் சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சேத்தூரில், பத்து ஆண்டுக்கு முன்பு கோசுகுறிச்சி கால்நடைமருந்தகத்தின் மூலம் துணை சுகாதார நிலை யம் துவக்கப்பட்டு செயல்பட்டது. இதனால் சேத்தூர் ஊராட்சியிலுள்ள விவசாயிகள் தங்களின் கால்நடைகளுக்கு எளிதில் சிகிச்சை பெற முடிந்தது. இந்நிலையில் சேத்தூரில் அமைக்கப்பட்ட துணை சுகாதாரநிலையம் காரணமில்லாமல் மூடப்பட்டது. இதனால் கால்நடைகள் காணை, கழிச்சல், குடற்புழு போன்ற நேயால் அவதிப்படும்போதும் ஏழு கி.மீ., தூரமுள்ள கோசுகுறிச்சிக்கு சேத்தூர் பகுதி விவசாயிகள் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சேத்தூர் ஊராட்சி பகுதி விவசாயிகள் பயனடையும் வகையில், மீண்டும் கோசுக்குறிச்சி துணை நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.