/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ரேஷன் பணியாளர்களை அரசு ஊழியராக்க கோரிக்கைரேஷன் பணியாளர்களை அரசு ஊழியராக்க கோரிக்கை
ரேஷன் பணியாளர்களை அரசு ஊழியராக்க கோரிக்கை
ரேஷன் பணியாளர்களை அரசு ஊழியராக்க கோரிக்கை
ரேஷன் பணியாளர்களை அரசு ஊழியராக்க கோரிக்கை
ADDED : செப் 05, 2011 11:53 PM
கிருஷ்ணகிரி : 'தமிழகத்தில் கூட்டுறவு நியாயவிலைக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்களை, அரசு ஊழியர்களாக்க வேண்டும்' என, தமிழக முதல்வருக்கு, தமிழ்நாடு கூட்டுறவு நியாயவிலை கடை விற்பனையாளர்கள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் வெங்கடேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ரேஷன் கடையில் பணிபுரியும் விற்பனையாளர் எடையாளர்களுக்கு போதிய சம்பளம் இல்லாமல் பணி பாதுகாப்பு இல்லாமல் பல ஆண்டு காலமாக பணியாற்றி வருகிறார்கள். மேலும் 30 ஆண்டு காலமாக ஊதிய உயர்வு இல்லாமல் பல்வேறு பிரச்னைகளில் பணியாற்றி வருகிறார்கள். பொது விநியோக திட்டம் செம்மையாக செயல்பட வேண்டுமென்றால், கூட்டுறவில் பணியாற்றும் நியாயவிலை கடை ஊழியர்களை அரசு ஊழியராக்க வேண்டும். அல்லது பொது விநியோக திட்டத்தை தனித்துறை ஆக்க வேண்டும். கூட்டுறவு துறையில் தணிக்கை அதிகாரிகள் சிலர் கையூட்டுக்கு ஆசைப்படுகிறார்கள். இதனை சரி செய்வதற்கு விற்பனையாளர்கள் சில தவறுகள் செய்தாக வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. எனவே தணிக்கை அதிகாரிகளை குறைக்க வேண்டும். விற்பனையாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யும் முன்பு அவர் செய்த தவறுகளுக்கு விளக்கம் கேட்டு அதற்கு சரியான முறையில் பதில் அளிக்கவில்லை என்றால் அதன்பி றகு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி ஒன்றை அமைக்க வேண்டும். இந்த கமிட்டியில் தொழில் சங்க நிர்வாகிகளை உறுப்பினராக நியமிக்க வேண்டும். நியாயவிலை கடைகளில் 1 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்தவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும். நுகர்பொருள் அங்காடிக்கு குவிண்டாலுக்கு 1 சதவீதம் சேதாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கூட்டுறவு நியாயவிலை கடைகளில் இந்த நடைமுறை இல்லை. அதனால் கூட்டுறவு நியாயவிலை கடைகளுக்கும் 1 சதவீதம் சேதாரம் வழங்கப்படவேண்டும். ஏற்கெனவே வழங்கப்பட்ட பயணப்படியை மீண்டும் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.